புதுடெல்லி: உத்தரகாண்டில் கொலைக் குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின் அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ஆனால் அவர் 24 ஆண்டுகால சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டதால் அவரை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு வருமாறு: உத்தரகாண்ட் மாநிலம் 2022 நவம்பர் 29ம் அன்று தனியாக கைதிகளின் தண்டனை/மன்னிப்பு/முன்கூட்டிய விடுதலை தொடர்பான சட்டங்களை உருவாக்கி உள்ளது. அந்த தாராளமயமாக்கப்பட்ட கொள்கை நடைமுறைக்கு வரும் வரை, தண்டனைத் தேதியில் இருக்கும் கொள்கையே பொருந்தும். எனவே முன்கூட்டிய விடுதலைக்கான மனுதாரரின் மனு வருகிற நவம்பர் 30 அல்லது அதற்கு முன் சாதகமாக பரிசீலிக்கப்படும். இதில் ஏதேனும் தாமதம் இருந்தால் சட்ட அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். எனவே மனுதாரர் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. இந்த நீதிமன்றத்தின் முன் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.