சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உண்மையாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது சிறைவாழ்க்கை கொடுமைகளில் இருந்து விடுபடுவதற்கு நினைத்தாலும் சிறைக்கு வெளியில் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்காக பரிந்துரைக்க ரூ.50,000மும், உள்நோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்கு பரிந்துரைக்க ரூ.3 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலும் அங்குள்ள மருத்துவக் குழுவினரால் கையூட்டாக வசூலிக்கப்படுகிறது என்று செய்திகள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.