தஞ்சை: திருட்டு முயற்சி வழக்கில் கைதான கைதி தப்பியோடிய நிலையில் 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தலைமைக் காவலர் மதுசூதனன், காவலர்கள் கார்த்திகேயன், பிரம்மா ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். கைதி சுமனை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பியோடியதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.