ஆந்திரா: சிறையில் இருக்கும் எனக்கும், வெளியில் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையில் இருந்து ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.