மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கிளியா நகர் ஊராட்சியில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், கிளியாநகர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.65 லட்சம் மதிப்பில் நான்கு வகுப்பறைகளுடன் கூடிய பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை முதல்வர் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு பள்ளி கட்டிடத்தை திறந்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன், திமுக ஒன்றிய செயலாளர் தம்பு, கவுன்சிலர் சிவபெருமான், மாவட்ட கவுன்சிலர் மாலதி, ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானப்பிரகாசம், சிவக்குமார், ஊராட்சி செயலர் தயாநிதி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.