லண்டன்: தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக இளவரசர் ஹாரி லண்டன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். இங்கிலாந்து மன்னர் சார்லசின் இளைய மகன் ஹாரி. இங்கிலாந்தின் புகழ்பெற்ற நாளிதழ்களான டெய்லி மிரர், தி சன்டே மிரர் மற்றும் சன்டே பீப்பிள் ஆகியவற்றின் வௌியீட்டாளரான மிரர் குரூப் நியூஸ் பேப்பர்ஸ் குழுமம் மீது ஹாரி மற்றும் 100க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் இளவரசர் ஹாரி நேற்று ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது “என்னை ஏமாற்றுபவர், இளம் வயது குடிகாரர், பொறுப்பற்ற நபர் என நாளிதழ்களில் செய்தி வௌியிடப்பட்டதாக” தெரிவித்தார். இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர்களில் 130 ஆண்டுகளுக்கு பிறகு இளவரசர் ஹாரி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.