குவைத்: ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குவைத் பட்டத்து இளவரசரை சந்தித்து பேசினார். ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒருநாள் பயணமாக நேற்று குவைத் புறப்பட்டு சென்றார். விமான நிலையம் சென்றிறங்கிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு குவைத் பிரதமர் அப்துல்லா அலி அல்-யஹ்யா நேரில் சென்று உற்சாக வரவேற்பளித்தார். பின்னர் குவைத் அரண்மனைக்கு சென்ற ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-சபா அல்-அஹ்மத் அல்-முபாரக் அல்-சபாவை சந்தித்து பேசினார்.
அப்போது பட்டத்து இளவரசருக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி ஆகியோரின் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். இதைத்தொடர்ந்து இந்தியா – குவைத் இடையே பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த நல்லெண்ண உறவுகள், நட்பை பற்றி இருவரும் பகிர்ந்து கொண்டனர். மேலும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.