புதுடெல்லி: மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டங்களில் முதன்மை விருந்தினராக கலந்துகொள்ள பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக மொரீஷியஸ் செல்கிறார். மொரீஷியஸ் நாட்டில் மார்ச் 12ல் தேசிய தின கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும்படி பிரதமர் மோடிக்கு, மொரீஷியஸ் அதிபர் நவின் ராம்கூலம் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வரும் 11 மற்றும் 12ம் தேதி அங்கு செல்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் இந்திய பாதுகாப்புப் படைகளும் பங்கேற்க உள்ளன. இந்திய கடற்படைக் கப்பல் ஒன்று மொரிஷியஸ் செல்ல உள்ளது. மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸில், மொரீஷியஸ் அதிபர் ராம்கூலத்தை பிரதமர் மோடி சந்தித்து ராவிரிவான பேச்சுவார்த்தை நடத்துவார். மொரீஷியஸின் மக்கள்தொகையில் இந்திய வம்சாவளியினர் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement


