Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம்

டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இன்று பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதன்படி இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையை தொடர்ந்து 48 சுற்றுலா தலங்களை அம்மாநில அரசு மூடி இருக்கிறது. தற்போது காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தளங்கள் உள்ளன. அதில் 48 சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தூத் பத்ரி, சிந்தன் டாப் உள்ளிட்ட பகுதிகளை நிரந்தரமாக மூடப்பட்டன. எஞ்சிய உள்ள சுற்றுலா தலங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 6வது நாளாக துப்பாக்கிச் சூடு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள சில இடங்களில் பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்திய பாக். ராணுவத்துக்கு பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் தகவல் அளித்துள்ளது. பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது.