Friday, March 1, 2024
Home » பிரதமர் வேட்பாளர் கார்கே மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் பரிந்துரையில் அதிருப்தி இல்லை: அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்; நிதிஷ் குமார் விளக்கம்

பிரதமர் வேட்பாளர் கார்கே மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் பரிந்துரையில் அதிருப்தி இல்லை: அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்; நிதிஷ் குமார் விளக்கம்

by Karthik Yash

பாட்னா: பிரதமர் வேட்பாளராக கார்கேவின் பெயரை பரிந்துரை செய்ததில் தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளது என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். 2024 மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த ஒன்றிணைந்துள்ள 29 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் 4வது கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது 2024 மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் கார்கேவின் பெயரை மேற்குவங்க முதல்வர் மம்தாவும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் முன்மொழிந்தனர். ஆனால் இதை கார்கே ஏற்கவில்லை.

ஆனால் மம்தா, கெஜ்ரிவாலின் திடீர் அறிவிப்பால் இந்தியா கூட்டணி உருவாக ஆணிவேராக இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிதிஷ் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதனப்படுத்தியதாக செய்திகள் வௌியாகின. இதை வைத்து இந்தியா கூட்டணி கட்சிகளுக்கிடையே குழப்பம், பிரதமர் வேட்பாளர் பெயர் அறிவிப்பில் நிதிஷ் அதிருப்தி என பாஜ கூறி வருகிறது. இந்நிலையில் பாட்னாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நிதிஷ் குமார், “நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். 2024 மக்களவை தேர்தலுக்கு முன் பாஜவுக்கு எதிராக அதிக கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என ஒரே திசையில் பயணிக்கிறேன். பிரதமர் வேட்பாளராக கார்கேவின் பெயரை பரிந்துரை செய்ததில் நான் அதிருப்தியில் உள்ளதாக கூறுவது பொய். இதனால் ஜனதா தள கட்சியில் குழப்பம், இந்தியா கூட்டணியில் குழப்பம் என பாஜ சொல்வதை பற்றி நான் கவலைப்படவில்லை. எங்கள் கட்சியிலும், இந்தியா கூட்டணியிலும் அனைவரும் ஒற்றுமையாக, நலமாக இருக்கிறோம். பீகாரை பொறுத்தவரை மாநிலத்தின் வளர்ச்சியில் மட்டுமே நாங்கள் அக்கறை செலுத்துகிறோம். பீகாரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்று கூறினார்.

You may also like

Leave a Comment

fourteen + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi