டெல்லி: பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லவேண்டும் என நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் என எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நான் இன்று டெல்லியில் வசிக்கும் மணிப்பூரைச் சேர்ந்த மக்களை சந்தித்தேன். தங்கள் மாநிலத்தில் ஏற்பட்ட மோதல்கள், போராட்டங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டனர். நாம் சுதந்திர தினத்தை கொண்டாடும்போது மணிப்பூரில் உண்மையான சுதந்திரம் மழுப்பலாக உள்ள அவலநிலையை பற்றி சிந்திக்கவேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.