சென்னை: தமிழ்நாட்டுக்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தர வேண்டிய நிலுவைத் தொகையை மாணவர்கள் நலன் கருதி விடுவிக்க வேண்டும். சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களுக்கு முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை. நாட்டின் கல்வித்துறையில் ஒன்றிய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டம் இதுவாகும்