புதுடெல்லி: சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐநா சார்பில் ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றுகளை நடவு செய்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “குஜராத் மாநிலம் கட்ச் பகுதி, கடந்த 1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போரில் துணிச்சல் மற்றும் தேசபக்தியை வௌிப்படுத்தியது.
அண்மையில் நான் கட்ச் சென்றபோது அங்குள்ள தாய்மார்கள், சகோதரிகள் உள்ளிட்ட பெண்கள் எனக்கு சிந்தூர் மரக்கன்றுகளை பரிசாக தந்தனர். அதனை சுற்றுச்சூழல் தினத்தில் என் வீட்டு தோட்டத்தில் நடவு செய்துள்ளேன். இந்த மரங்கள் நாட்டின் பெண் சக்தியின் வீரம் மற்றும் உத்வேதகத்தின் வலிமையான அடையாளமாக திகழும்” என தெரிவித்துள்ளார்.