டெல்லி: பிரதமர் மோடியுடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தொலைபேசியில் பேசினார். வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த 5ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனை தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற முகம்மது யூசுப் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இதனிடையே ஒருபுறமிருக்க வங்க தேசத்தில் சிறுபான்மையினர்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள வங்க தேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாக செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடைபெறுவதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகும் நிலையில் பிரதமர் மோடியுடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தொலைபேசியில் பேசினார். அப்போது; வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் உட்பட சிறுபான்மையினரது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என முகமது யூனுஸ் கூறினார்.
அமைதியான மற்றும் முற்போக்கு வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு உண்டு என மோடி வலியுறுத்தினார். வங்கதேசத்தில் தற்போதைய நிலவரம் குறித்து இருதரப்பு கருத்துகள் பகிரப்பட்டன என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.