Wednesday, May 21, 2025
Home செய்திகள்Banner News 3 ஆண்டுகளில் 38 முறை.. பிரதமர் மோடி வெளிநாட்டு பயணச்செலவு ரூ.258 கோடி : ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் பதில்

3 ஆண்டுகளில் 38 முறை.. பிரதமர் மோடி வெளிநாட்டு பயணச்செலவு ரூ.258 கோடி : ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் பதில்

by Porselvi

டெல்லி : கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.258 கோடி என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. குறிப்பாக 2023ம் ஆண்டு ஜூனில் அமெரிக்கா சென்றதற்கான செலவு மட்டும் ரூ.22.89 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் சென்ற வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வெளியிடுமாறு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் தந்த வெளியுறவு இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா, பிரதமர் மோடி கடந்த 2022 மே முதல் 2024 டிசம்பர் வரை பிரதமர் மேற்கொண்ட 38 வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வழங்கினார். இந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணங்களுக்கான மொத்த செலவு ரூ.258 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 2023 ஜூனில் அமெரிக்கா சென்றதற்கான செலவு மட்டும் ரூ.22.89 லட்சம் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற போது ரூ.15.33 கோடி செலவாகி இருக்கிறது. 2023ல் ஜப்பான் பயணத்திற்கு ரூ.17.19 கோடி, 2022ல் நேபாளம் பயணத்திற்கு ரூ. 80 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi