டெல்லி: பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதாக காங். நிர்வாகியான இம்ரான் மசூத் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்; நாம் விஸ்வ குருவாகப் போவதாக கூறுகிறார்கள், ஆனால் நாட்டின் ஏற்றுமதி ஏன் சரிந்துவிட்டது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வேலை வாய்ப்பு பற்றி பேசும் பாஜக ஆட்சியில் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். பாஜக ஆட்சி, அரசு வேலைவாய்ப்புகளுக்கு முடிவு கட்டிவிட்டதாகவும், விவசாயி நிலை பற்றி ஆளும் பாஜக பேசுவதே இல்லை; குடியானவர்கள் தற்கொலை செய்வதாகவும் அவர் குற்றச்சாட்டினார்.
பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் மோசமாகி விட்ட இந்தியா: காங்கிரஸ் குற்றச்சாட்டு
0