மதுரை: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் முறையாக வெளிப்படைத் தன்மையோடு செயல்படுத்தப்பட வேண்டும். திட்டத்தில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சிவகங்கை ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.