தேனி: பெரியகுளம் அருகே பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஓ.ராஜா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக நாகமுத்து இருந்தார். ஓ.ராஜாவுடன் கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் பூசாரி நாகமுத்து தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் 2012 டிச.7-ம் தேதி பூசாரி நாகமுத்து தற்கொலை செய்துகொண்டார். பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக ஓ.ராஜா, பாண்டி, மணிமாறன் உள்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் பாண்டி இறந்துவிட்டார்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி 2015 முதல் வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஓ.ராஜா மீதான வழக்கில் 390 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தேனி: பெரியகுளம் அருகே பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஓ.ராஜா உள்ளிட்டோரை விடுதலை விடுதலை செய்து திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஓ.ராஜா, பாண்டி, மணிமாறன், சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.