திண்டிவனம்: தமிழக அரசு அசிரி விலையை கட்டுப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது; மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்ட நிலையில் தமிழகத்திலுள்ள 13 மருத்து கல்லூரியில் கல்லூரியின் ( டீன்) முதன்மையர்களை நியமிக்காமல் உள்ளனர்.
அரிசி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூட்டுறவு அங்காடியில் சன்னரக அரிசி விற்பனை செய்ய வேண்டும், போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் பணப்பலன்கள், அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.