டெல்லி: விலை உயர்வை கட்டுப்படுத்த 2.84 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. வெளிச் சந்தையில் உணவு தானியத்தின் விலை உயராமல் கட்டுப்படுத்தும் நோக்கில் கோதுமை, அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. 5,830 டன் அரிசியும் மின்னணு ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 3 லட்சம் டன் கோதுமை மற்றும் 1.79 லட்சம் டன் அரிசியை ஏல முறையில் விற்க திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.