சென்னை: டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு நடைமுறைக்கு வந்தது. மதுபானங்களின் விலையை டிஜிட்டல் போர்டு மூலம் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர். மாவட்டத்துக்கு 5 கடைகள் வீதம் முதற்கட்டமாக 200 டாஸ்மாக் கடைகளை நவீனப்படுத்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எந்தெந்த மதுபானங்கள், எவ்வளவு விலை என்பதை அறியும் வகையில் டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டுள்ளது