அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு எதிரொலி அமெரிக்க எல்லையில் பாதுகாப்பு பணிக்கு 10,000 வீரர்களை மெக்சிகோ அனுப்பியது
சியுடாட் ஜூவாரெஸ்: அமெரிக்க எல்லையில் பாதுகாப்பு பணிக்கு 10,000 தேசிய காவல் வீரர்களை மெக்சிகோ அனுப்பி உள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா, சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தப்படும் என டிரம்ப் அறிவித்தார். சட்ட விரோத குடியேற்றம் மற்றுமு் போதை பொருள் கடத்தலை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் கூறினார். மேலும் அமெரிக்காவின் தெற்கு எல்லை பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.



