புதுடெல்லி: 78வது சுதந்திரதினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார். நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்நிலையில் குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது வானொலி மற் றும் தொலைக்காட்சியில் இரவு 7 மணி முதல் ஒளிபரப்பப்படும். அதை தொடர்ந்து ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்படும்.