புதுடெல்லி: அம்ரித் உத்யன் எனப்படும் குடியரசு தலைவர் மாளிகை தோட்டம் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்தது. உத்யன் உத்சவ் எனும் திட்டத்தின் மூலம் இந்த ரம்மியான தோட்டத்தை ஆண்டுதோறும் ஒரு மாதத்திற்கு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உத்யன் உத்சவ் வரும் 16ம் தேதி தொடங்கி செப்டம்பர் 15ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான நுழைவு இலவசம். ராஷ்டிரபதி பவன் இணையதளத்தில் (https://visit.rashtrapatibhavan.gov.in/) ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.