டெல்லி: அவரது வாழ்க்கையும், தலைமைப் பண்பும் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறது என குடியரசு தலைவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், குடியரசுத் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது வாழ்க்கையும் தலைமைத்துவமும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றன. பொது சேவை, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அனைவருக்கும் நம்பிக்கை மற்றும் பலத்தின் கலங்கரை விளக்கமாகும். ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் எப்போதும் பாடுபட்டுள்ளார். மக்கள் சேவையில் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அவர் பெற ஆசீர்வதிக்கப்படுவார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது வாழ்க்கையும், தலைமைப் பண்பும் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறது: குடியரசு தலைவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
0