டெல்லி: முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் முப்படைகளின் தளபதிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர். ராணுவத் தளபதி உபேந்திர திவேதி, விமானப்படை தளபதி ஏ.பி.சிங், கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்தனர். ஆப்ரேசன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து தாக்குதல் விவரங்களை முப்படை தளபதிகள் பகிர்ந்தனர். இந்திய படைகளின் வீரம், அர்ப்பணிப்பு நாட்டை பெருமை கொள்ளச் செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் முர்மு பாராட்டு தெரிவித்தார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு..!!
0