பொன்னேரி: பொன்னேரியில் ராஜிவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு 500 கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளை சசிகாந்த் செந்தில் எம்பி மற்றும் துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர். பொன்னேரியில் ராஜிவ்காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் என 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அங்கன்வாடி ஊழியர்களின் வழிகாட்டுதலின் பேரில் பச்சைபயிறு, நெய், நிலக்கடலை, கொண்டை கடலை, பேரிச்சம் பழம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது.
இதில், திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில், எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினை வழங்கினர். இந்த விழாவில் ஒன்றியக்குழு தலைவர் ஜி.ரவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மோகனா, காங்கிரஸ் மாநிலச் செயலாளர் அஸ்வின் குமார், பொருளாளர் மணவாளன், காங்கிரஸ் நிர்வாகிகள் அத்திப்பட்டு புருஷோத்தமன், ஜெயசீலன், வினோத், கார்த்திகேயன், ஜெய்சங்கர், ஜெயராமன், கௌதம், சிலம்பரசன், ராஜிவ்காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.