கொள்ளிடம்,மே 31: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புளியந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் வில்லு (70). இவரது மகள் அருள்ஜோதி (25). இவர், சென்னை பூந்தமல்லியை சேர்ந்த மீன் வியாபாரி தமிழரசன் (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அருள்ஜோதி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் அருள்ஜோதி சென்னையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து அருள்ஜோதியின் உடல் நேற்று சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. மகள் உடலை பார்த்து கதறி அழுத அவரது, தந்தை வில்லு அதிர்ச்சியில் மயங்கி விழுந்து அதே இடத்தில் உயிரிழந்தார். பின்னர் ஒரே இடத்தில் இருவரின் உடலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து கிராம மக்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.