ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் மேற்பரப்பில் ஆய்வுக்கு நடுவே, விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்தது. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்பியது. அது தனது 41 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, கடந்த 23ம் தேதி விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையில் இறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது.
ரோவர் 14 நாள் நிலவை ஆராய்ந்து அந்த தகவல்களை சேகரித்தும், நிலவில் உள்ள கனிமங்கள், அதன் தன்மை, வெப்பநிலை, பூமியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் வெப்பநிலை என பல பிரத்யேக ஆய்வுகளை சந்திரயான்-3 திட்டக்குழு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே நேற்று ரோவரில் உள்ள லேசர் இண்டியூசிட் பிரேக்டவன் ஸ்பெட்ரோஸ்கோப் கருவி நிலவின் பரப்பில் சல்பர் வேதிபொருள் இருப்பதை உறுதி செய்யதுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் ஹைட்ரஜன் உள்ளாதா என தற்போது ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில்
நிலவின் மேற்பரப்பில் ஆய்வுக்கு நடுவே, விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்தது. நிலவின் தென் துருவத்தில் இருந்து லேண்டர் மூலம் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட ChaSTE, ILSA கருவிகளின் படங்களை வெளியிட்டது இஸ்ரோ; லேண்டரில் பொருத்தப்பட்ட அனைத்து கருவிகளின் செயல்பாடுகளும் சீராக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ChaSTE – நிலப்பரப்பின் வெப்பநிலையை கணக்கிடும் கருவி; ÅLSA – கனிமங்களின் தன்மை, அங்கு ஏற்படும் அதிர்வுகளை கண்டறியும் கருவி. நிலவின் தரையில் இறங்கி நகர்ந்து வரும் பிரக்யான் ரோவர் தனது கேமரா மூலம் விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பியுள்ளது.
பிரக்யான் ரோவர் எடுத்துள்ள விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ரோவரின் திசை, பாதையை கண்டறிய பொருத்தப்பட்டுள்ள கேமரா உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. இதுரை விக்ரம் லேண்டரில் இருந்து மட்டுமே புகைப்படம் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பிரக்யான் ரோவரின் புகைப்படக் கருவியும் செயல்படத் தொடங்கியது.