வேதாரண்யம், நவ.11: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.பின்னர் வண்ண மலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.இதைப்போல வேதாரண்யம் வேதமிருத ஏரியில் நடுவில் அமைந்துள்ள தடாக நந்திகேஸ்வரருக்கும், தோப்புத்துறை கைலாசநாதர் கோயில், வடமறைக்காடர் கோயில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோயில், கோடியக்காடு குழவர் கோயில் ஆகிய சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஆங்காங்கே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்