திருச்சி: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொல்கத்தா, டெல்லி, மும்பை, பஞ்சாப்பை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் போராட்டம் பரவியுள்ளது. கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து அரியலூரில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பேரணி நடத்தி வருகின்றனர். அரியலூர் மருத்துவ கல்லூரியில் இருந்து ஊர்வலமாக சென்று மருத்துவமனை நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.