சென்னை: மின் தடையால் தங்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை, மறுதேர்வுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தார். இந்நிலையில், மின் தடையாலா எந்த பாதிப்பும் இல்லை. மறு தேர்வு நடத்த முடியாது என்று தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்குகளை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து நீட் மாணவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம்.ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மின்தடையால் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை தேசிய தேர்வு முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மின் தடையால் நீட் தேர்வு பாதிப்பு விவகாரத்தில் மறுதேர்வு நடத்தகோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
0