திருப்பூர், நவ.15: திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: திருப்பூர் குமார் நகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (16ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ.லே அவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாரதி நகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் ஏரியா, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி தியேட்டர் ஏரியா, ஆசர் நகர், நாராயணசாமி நகர், காந்தி நகர், டிடிபி மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு மற்றும் சிங்கார வேலன் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.