மின் பகிர்மான பவர்கிரிட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள இன்ஜினியர், சர்வேயர், டிராப்ட்ஸ்மேன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. Junior Engineer (Survey Engineering): 15 இடங்கள். சம்பளம்: ரூ.26,000- 1,18,000. வயது: 31க்குள். தகுதி: சர்வே இன்ஜினியரிங் பாடத்தில் 70% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியும், 4 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
2. Surveyor: 15 இடங்கள். சம்பளம்: ரூ.22,000- 85,000. வயது: 32க்குள். தகுதி: சர்வேயர் டிரேடில் 2 வருட ஐடிஐ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம்.
3. Draughtsman: 8 இடங்கள். வயது: 32க்குள். சம்பளம்: ரூ.22,000-85,000. தகுதி: டிராப்ட்ஸ்மேன் (சிவில்) பிரிவில் 2 வருட ஐடிஐ தேர்ச்சியுடன், 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.விண்ணப்பதாரர்கள் சிபிடி தேர்வு மற்றும் டிரேடு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
http://www.powergrid.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2024.