நடப்பு தொடரில் பவர் பிளேவில் வீசப்படும் முதல் 6 ஓவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த ஓவர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் கலீல் அகமது 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைப் பட்டியலில், பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங், குஜராத் டைடன்ஸ் அணியின் முகம்மது சிராஜ் தலா 8 விக்கெட்டுகளுடன் 2ம் இடத்தில் உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தீபக் சஹர், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனும் நட்சத்திர பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 7 விக்கெட்டுகளுடன் 3ம் இடத்தை பிடித்துள்ளனர். அதே சமயம், பவர் பிளேவில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த கேப்டனாக பேட் கம்மின்ஸ் ஜொலிக்கிறார்.