பொதுத்துறையைச் சேர்ந்த மின் பகிர்மான நிறுவனமான பவர் கிரிட் நிறுவனத்தில் ஜூனியர் ஆபீசர் டிரெய்னீஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பணி: Junior Officer Trainee (HR): 38 இடங்கள் (பொது-22, பொருளாதார பிற்பட்டோர்-4, ஒபிசி-5, எஸ்சி-6, எஸ்டி-1). சம்பளம்: ₹25,000- 1,17,500.
வயது: 5.10.2023 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: BBA/BBM/BBS ஆகிய ஏதாவதொரு பட்டப்படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு, கம்ப்யூட்டர் திறன் அறியும் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: ₹300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
www.powergrid.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 05.10.2023.