திருத்தணி: மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய இந்த மாதம் 24, தேதி முதல் அடுத்தமாதம் 23ம் தேதி வரை மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார். அதன்படி, திருத்தணி மின் கோட்டத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
திருத்தணியில் முகாமை எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்து மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யக் கோரி விண்ணப்பித்த நுகர்வோருக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. திருத்தணி கோட்டத்தில் பெயர் மாற்றம் செய்ய கோரில் விண்ணப்பித்த 24 பேருக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதாக கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்தார்.