சென்னை: மின்இணைப்பு வழங்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. தையூர் பங்களாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார். வீட்டின் மீது ராஜேஷ் தாஸுக்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில் மீண்டும் மின் இணைப்பு கேட்டு கோரிக்கை விடுக்க முடியாது என பீலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வீட்டுக் கடனை தாம் செலுத்தி வருவதாகவும் தனது உடல் நலனையும் கருத்தில் கொண்டு மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என ராஜேஷ் தாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மின்இணைப்பு வழங்கக் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
மின்இணைப்பு வழங்கக் கோரி மனு: ராஜேஷ் தாஸ் கோரிக்கை நிராகரிப்பு
103