Friday, March 1, 2024
Home » பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து மேலாண் இயக்குநர் தகவல்

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து மேலாண் இயக்குநர் தகவல்

by Karthik Yash

சென்னை: பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என போக்குவரத்து துறை மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவண்ணாமலையில் பவுர்ணமி திருநாளில் நடைபெறும் கிரிவலத்தை முன்னிட்டு பயணிகள் திருவண்ணாமலைக்கு அதிக அளவில் சென்று வருவார்கள். அவர்களுக்கு ஏதுவாக சென்னையிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் 20 அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் இன்று சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, மற்றும் tnstc செயலி ஆகிய இணையதளங்களின் மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு சென்னை கோயம்பேடு 9445014452 மற்றும் 9445014424 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனவே, திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் பேருந்து வசதியை முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

one × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi