செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த புத்தேரி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் சாலை மறியல் காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.