செங்கல்பட்டு: பொத்தேரி அருகே தனியார் கல்லூரியை சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் கஞ்சா வைத்திருந்த 20 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் உட்பட 21 பேர் கைது செய்து 60 இருசக்கர வாகனங்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர்கள் இடையே கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் காலையில் சோதனை நடத்தினர். சோதனையின்போது போதைப்பொருட்கள் பயன்படுத்தி வந்த 20 மாணவர்கள் பிடிபட்டனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை மறைமலைநகர் போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
பொத்தேரி அருகே தனியார் கல்லூரியை சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் கஞ்சா வைத்திருந்த 20 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
109
previous post