Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு அக்டோபருக்கு ஒத்திவைப்பு

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான போட்டித் தேர்வுகள் செப்டம்பர் 28ம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கண்ட தேர்வு நடக்கும் தேதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய நடத்தும் குரூப் 2 தேர்வு நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உள்ளிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள போட்டித் தேர்வுகள் அக்டோபர் 12ம் தேதி நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.