சென்னையில் இயங்கி வரும் இந்திய தபால் துறையின் மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள ‘ஸ்கில்டு ஆர்டிசன்ஸ்’ பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Skilled Artisans: மொத்த இடங்கள்: 10.
டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்:
M.V. Mechanic-4, M.V. Electrician-1, Tyreman-1, Blacksmith-3, Carpenter-1.
சம்பளம்: ₹19,900-63,200. வயது வரம்பு: 1.7.2024 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MV Mechanic பாடப் பிரிவுக்கு கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்களுக்கு டிரேடு தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ₹400/-. எஸ்சி/எஸ்டியினருக்கு கட்டணம் கிடையாது. மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.08.2024.