நாமக்கல்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நாமக்கல்லில் அளித்தபேட்டி: நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க, ஒரு சில கட்சிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம். பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற கூட்டணியில், அமமுக இடம்பெறும். எல்லோரும் ஓடி ஓடி உழைத்துதான் பதவிக்கு வருவார்கள். எடப்பாடி பழனிசாமி, தவழ்ந்து வந்திருக்கிறார் என்றால், காலை பிடித்துதான் பதவிக்கு வந்திருக்கிறார்.
அந்த உண்மையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். கொடநாடு கொள்ளை, கொலை எப்போது நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த கொலை, கொள்ளைக்கு காரணமானவர்களை, பின்னணியில் இருப்பவர்களை, அந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக, போலீசார் முழு முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில், அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.