Thursday, April 18, 2024
Home » பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜவில் சேர்ந்த நீதிபதியை விளாசினார் உத்தவ் தாக்கரே

பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜவில் சேர்ந்த நீதிபதியை விளாசினார் உத்தவ் தாக்கரே

by Karthik Yash

சத்திரபதி சாம்பாஜிநகர்: பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்தார். கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் கங்கோபாத்தியாய். கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது: மேற்கு வங்கத்தில் ஒரு நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். மேலும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் பாஜவில் சேர்ந்துள்ளார். இவர் மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கு எதிராக பல தீர்ப்புக்களை வழங்கியவர். இவர் பதவி வகித்த காலத்தில் நீதிபதி பதவியின் புனிதத்தை காப்பாற்றியவர் என்று உங்களால் கூற முடியுமா? அதே போல மகாராஷ்டிரா சட்டபேரவை சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு மக்களவை எம்.பி. ஆக்குகிறோம் என்று ஆசை காட்டி சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் மனுக்கள் மீது தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளனர். பா ஜ கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பங்கஜா முண்டேயின் அரசியல் வாழ்க்கையை ஒழித்துகட்ட பாரதிய ஜனதா முயன்று வருகிறது. இவ்வாறு கூறினார்.

You may also like

Leave a Comment

seven − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi