மியுனிச்: நேஷன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை போர்ச்சுகல் அணி அபாரமாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஜெர்மனியின் மியுனிச் நகரில் அலியான்ஸ் அரீனா மைதானத்தில் நேற்று, யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டி நடந்தது. அதில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியும், ஸ்பெயின் அணியும் மோதின. இப்போட்டியில் இரு அணி வீரர்களும் துடிப்புடன் செயல்பட்டு கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர்.
கடும் போராட்டத்துக்கு இடையே, இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தனர். அதன் பின் கோல்கள் விழாததால், பெனால்டி ஷூட்அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில், போர்ச்சுகல் வீரர்கள் அபாரமாக 5 கோல்கள் அடித்தனர். ஸ்பெயின் வீரர்கள் 3 கோல்கள் மட்டுமே போட்டதால், 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.