சென்னை: சென்னை துறைமுகம் தொகுதியில் தயாளு அம்மாள் தொண்டு நிறுவனம் சார்பில், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் கணினி மற்றும் தையல் பயிற்சி வழங்கும் மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று துவக்கி வைத்தார். சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் நேற்று பாரதி மகளிர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, துறைமுகம் கிழக்கு பகுதி, 56வது வட்டத்தில் தயாளு அம்மாள் தொண்டு நிறுவனம் சார்பில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கணினி பயிற்சி மையம், 57வது வட்டத்தில் உள்ள ஜட்காபுரத்தில் பெண்கள் சொந்த காலில் நிற்கும் வகையில் தையல் பயிற்சி மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் க.பொன்முடி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மத்தியசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் ப.தாயகம் கவி, அ.வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், துணைமேயர் மகேஷ்குமார், மண்டல குழுத் தலைவர் பி.ராமுலு, நிர்வாகிகள் எம்.விஜயகுமார், ஜி.எம்.தேவன், இசட்.ஆசாத், பகுதி செயலாளர்கள் எஸ்.ராஜசேகர், எஸ்.முரளி, மாமன்ற உறுப்பினர்கள் வி.பரிமளம், ராஜேஷ் ஜெயின், எல்.நவீன், வட்ட செயலாளர்கள் எம்.பரத்குமார், கதிரவன் (எ) ராஜா, எல்.சத்தியநாராயணன், எஸ்.புகழேந்தி, எஸ்.அஸ்லாம், கே.கவியரசு, ஆ.நா.பார்த்திபன், பா.கதிரவன், ஆர்.ரவிச்சந்திரன், ஜி.ராமமூர்த்தி, பா.அண்ணாதுரை, டீ.சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.