டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகள் கணக்கெடுக்கும் பணி 2026 ஏப்.1ல் தொடங்குகிறது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒன்றிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார். மாவட்ட, தாலுகா எல்லைகளை மாற்றி அமைக்கும் பணி இருந்தால் அதை டிசம்பர் 31க்குள் முடிக்க அறிவுறுத்தியுள்ளார். 2026 ஜனவரி 1 முதல் 2027 மார்ச் 31 வரை மாவட்ட, தாலுகா எல்லைகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி 2027 பிப்.1ம் தேதி தொடங்குகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகள் கணக்கெடுக்கும் பணி 2026 ஏப்.1ல் தொடக்கம்
0