சென்னை: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை 15 நாட்கள் புழல் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலுசெட்டி சத்திரம் அருகே டி.டி.எஃப் வாசன் சென்ற இருசக்கர வாகனம் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. பிரபல யூடியூபர் வாசனுக்கு அக்.3ம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.