ரோம்: கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த மாதம் 14ம் தேதி ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு நிமோனியா பாதிப்பு உறுதியானது. இதனிடையே அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
தொடர் சிகிச்சையால் போப் உடல்நிலையில் நாள்தோறும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம் மாலை வெளியான மருத்துவமனையின் செய்தி குறிப்பில் போப் பிரான்சிஸ் கடுமையான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தொடர்ந்து குணமடைந்து வருவதால் போப் நேற்று இயல்பாக இருந்ததாகவும் மருத்துவமனை அறையில் வழக்கமான பணிகளை மேற்கொண்டதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.